புதுக்கோட்டையின் கலை பண்பாட்டுக் கூறுகள் குறித்த சொற்பொழிவு

தமிழ்இணையக்கல்விக்கழகம்

சென்னை- 600 025.

வழங்கும்

இணையம்வழி

தமிழகவரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்

பற்றிய

தொடர்சொற்பொழிவு-2

‘புதுக்கோட்டையின்கலைபண்பாட்டுக்கூறுகள்’

என்னும்தலைப்பில்

 

பேரா. சு. சுவாமிநாதன்

அவர்கள்உரையாற்றுகிறார்.

 

நாள்   :           13.06.2014, வெள்ளிக்கிழமை

நேரம்            :           மாலை4.00மணி

இடம்:           தமிழ்இணையக்கல்விக்கழகம்,

(அண்ணாநூற்றாண்டுநூலகம்அருகில்)

காந்திமண்டபம்சாலை,

கோட்டூர், சென்னை-25.

தொ.பே: 22201012

 

அனைவரும்வருக!

 

முனைவர்ப.அர.நக்கீரன்

இயக்குநர்

தமிழ்இணையக்கல்விக்கழகம்

 

தமிழகவரலாறு,கலை,பண்பாடு,இலக்கியம்ஆகியவற்றைத்திரட்டி,தொகுத்து இணையத்தில் ஏற்றும் தமிழ் இணையக் கல்விக்கழக முயற்சியின் ஒரு பகுதியாக இச்சொற்பொழிவைத் திங்கள் தோறும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 

 

புதுக்கோட்டையின்பாரம்பரியம்

 

புதுக்கோட்டைமாவட்டத்திற்கு, அதற்கேஉரியசிலதனிச்சிறப்புகள்உண்டு. இந்தியவிடுதலையின்போதுமன்னர்ஆட்சியின்கீழ்இருந்தபுதுக்கோட்டைக்குசங்ககாலம்முதல்ஒருவரலாறும்உண்டு.

 

இதுகடந்தகாலசமணத்தின்தடங்களைக்கொண்டுள்ளது. புதுக்கோட்டையைகோயில்கட்டடக்கலையின்அருங்காட்சியகம்என்றுஅழைக்கலாம். ஏனென்றால்இம்மாவட்டத்துக்குகுகைக்கோயில்கள்முதல்நவீனகோயில்கள்வரையானநீண்டபாரம்பரியம்உள்ளது. திருமயத்தில்உள்ளஇரட்டைக்குகைக்கோயில்கள், நார்த்தாமலையில்உள்ளவிஜயாலாயசோழீசுவரம், கொடும்பாளூரில்உள்ளமூவர்கோயில், சித்தன்னவாசலில்உள்ளசமணர்குகைஓவியங்கள்ஆகியவைஉலகப்புகழ்பெற்றவை. புதுக்கோட்டைக்கோயில்களில்நுண்ணியவேலைப்பாடுகளுடன்அமைந்தசிற்பங்கள், அம்மாவட்டத்துக்குப்பெருமைசேர்க்கின்றன.

 

ஏறக்குறைய 400 ஆண்டுகளாக இம்மாவட்டம் தொண்டைமான் அரசர்களின் ஆளுமையின்கீழ் இருந்தது. இசை, நாட்டியம், இலக்கியம், பண்பாடு ஆகியவற்றிற்கு அவர்கள் அளித்த ஆதரவின் காரணமாக, தமிழகத்தின் பாரம்பரியத்திற்கான அடிச்சுவடுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் காணலாம்.

 

பேரா. சு. சுவாமிநாதன்ஓர்அறிமுகம்

 

புதுக்கோட்டையைச் சேர்ந்தவரான சுவாமிநாதன், கலை, கலாசார ஆர்வலர். நம்மக்கள் அவர்களுடைய பாரம்பரியத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்னும் கருத்து உடையவர். இயந்திரப் பொறியாளரானஇவர், தில்லி ஐஐடியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியராக இருந்திருக்கிறார். தற்போதுசென்னையில் வசிக்கும் இவர், தமிழ்பாரம்பரிய அறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி, அதன்மூலம் நம் கலாசாரத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அஜந்தா ஓவியங்கள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். பல்லவர்களின் மாமல்லபுரம் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகம் எழுதியுள்ளார். இவருடைய மின்னஞ்சல் முகவரி sswami99@gmail.com.

More – http://www.tamilheritage.in/2014/06/blog-post_10.html

Posted by Pudukkottai virtual heritage tour on Friday, June 20, 2014

http://tamilvirtualacademy.blogspot.sg/2014/05/blog-post.html

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.